பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய அல்லது தடுத்து வைக்க தற்போது எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று(13) அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, நியாயமான காரணங்களின்றி தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, வருண ஜயசுந்தரவால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு இந்த விபரத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!