வடக்கு மாகாணத்தில் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மாநகர சபை மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த ஆளுநர், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீன் ஆகிய இருவரும் மேற்குறிப்பிட்ட பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் எனத் தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, இந்த பதவி நீக்கம் நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!