தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று(07) சந்திப்பு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Exit mobile version