முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்!

இலங்கையின் முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா ராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் இன்று(07) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடகவியலாளரும் சிறந்த பேச்சாளருமான செ.ராஐதுரை, சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியவர்.

அதன்பின்னர்,1956 முதல்1989 வரை நாடளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக 1967 தொடக்கம் 1968 வரை பணியாற்றியவர்.

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டிஏ யிட்டு ஏ வெற்றி பெற்றார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

Exit mobile version