பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற இருவர் பலி!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடலில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இன்று(07) மாலை உயிரிழந்தனர்.

யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே உயிரிழந்தனர்.

பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version