கிரிபத்கொட நகரில் தீ விபத்து: கொழும்பு–கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!

கிரிபத்கொட நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தீயை அணைக்க கொழும்பு மற்றும் கம்பஹா நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கிரிபத்கொட நகரிலுள்ள கடைத் தொகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version