பஹ்ரைன் – மனாமாவில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் லஹிரு அச்சிந்தா 1500 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.
இவர், 3:57.42 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவின் ஷா லிஹுவா 3:58.73 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அவர் அச்சிந்தாவை விட 1.31 வினாடிகள் மட்டுமே பின்தங்கினார்.
அதேநேரத்தில் ஹொங்கொங்கின் ஆவ் ஹோ சுன் 4:05.09 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதற்கிடையில், பெண்கள் 1500 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் நெத்மி கிம்ஹானி புல்லே வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அவர் அந்த இலக்கை 4:52.32 என்ற நேரத்தில் நிறைவு செய்தார்.
Follow Us
