உள்நாட்டு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான நேற்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குழு நிலை விவாதத்தின் பின்னர் மாலை 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார்.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குறித்த அமைச்சின் ஏனைய செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டன.

மேலும், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தொழில் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button