
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் தேங்கியிருந்த நீர் அகற்றுவதற்காக ஜனநாயக போராளிகள் கட்சி நிதி உதவி வழங்கியுள்ளது.
இதற்கான நிதியுதவியை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் வழங்கிவைத்துள்ளார்.


கனடாவின் புளூஸ் அறக்கட்டளையின் அனுசரணையோடு 60 ஆயிரம் ரூபா நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Follow Us



