இலங்கைவடக்கு மாகாணம்
Trending

உண்டியல் பணத்தை கொடுத்துதவிய சிறுமி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறிது சிறிதாக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடுகள் தயாரிப்பதற்கு வழங்கிய நெகிழ்வான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கான நிதி சேகரிப்பில் வெண்கரம் அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அந்தவகையில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தரம் 07இல் கல்வி பயிலும் மாணவியான பு.சர்ஜனா என்ற சிறுமி, தனது அன்றாட செலவுகளை தியாகம் செய்து, சிறிது சிறிதாக சேகரித்த உண்டியல் பணத்தை கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கு வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று(30) வெண்கரம் அமைப்பினர் குறித்த மாணவியின் சமூக நலனை பாராட்டி, அவரை கௌரவித்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button