இலங்கை
Trending

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் நால்வர் கைது!

கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை ஊழியர்கள் விசேட அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மின்சார சபை விடுதியை சுற்றிவளைத்தனர்.

இதன்போது விடுதி வளாகத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார சபை ஊழியர்கள் நால்வரை கைது செய்த அதிரடிப்படையினர், புதையல் தோண்டப் பயன்படுத்தி உபகரணங்களையும் கைப்பற்றி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார்,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது, அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button