
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இலங்கை – இந்திய பக்தர்களின் பங்களிப்போடு சிறப்பாக இடம்பெற்றது.
கச்சதீவு புனித இந்தோணியார் ஆலய பெருந்திருவிழா நேற்று மாலை(27) கொடியேற்றத்தோடு ஆரம்பமாகியது.
கொடியேற்றத் திருவிழாவில், திருச்செல்வ பாதையோடு,நற் கருணைப் பெருவிழா இடம்பெற்றது.
இன்றைய தினம், இலங்கை – இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டு திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதோடு, அந்தோணியரின் திருச்செல்வ ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
இந்த திருவிழாவில், இலங்கையிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், இந்தியாவிலிருந்து 3992 பக்தர்களுமாக 10 ஆயிரம் வரையிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததாக யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.



