எரிபொருட்களின் விலையில் நேற்று(28) நள்ளிரவு முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லீற்றர் லங்கா ஓட்டோ டீசலின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 281 ரூபாவாகும்.
323 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 06 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.
92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் ஒன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 182 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 340 ரூபாவாகும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow Us



