இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜ் பூஷன் செளத்திரி தலைமையிலான குழுவினர் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று இந்த வரவேற்பை வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் இடம்பெறும், AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை(AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வோடு பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!
தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!