
வடக்கு புதையிரதப் பாதையின் மகாவ தொடக்கம் ஓமந்தை வரையான பாதை இம் மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்பிரல் 18 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு மீண்டும் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக புதையிரத திணைக்கள் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய கடன் உதவியில்,முன்னர் புதுப்பிக்கப்பட்ட ஐந்து பழைய பாலங்களை அகற்றி, அதற்குப் பதிலாக புதிய பாலங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய, மகாவ – அனுராதபுரம் வரையான பாதையும், அனுராதபுரம் – ஓமந்தை வரையான பாதையும் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களாக தற்காலிகமாக மூடப்படும்.
வடக்கு புகையிரதப் பாதையின் மகாவ – ஓமந்தை பகுதிகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஏப்பிரல் 18 ஆம் திகதிவரை மூன்று மாதங்களுக்கு மீண்டும் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
மேலும், அந்த ஐந்து பாலங்களும் தற்போது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.” – என்றுள்ளது.



