Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
பிள்ளையானுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியல்
இலங்கைஉலகம்குற்றவியல்
Trending

பிள்ளையானுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்,
முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று(30) முன்னிலைப்படுத்தியபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, உள்ளிட்ட மனித படுகொலைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் உட்பட மனித கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button