
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று(16) காலை 10.30 மணி முதல், நாளை (17) காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் முதல் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுள்ள கடற்பிராந்தியங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வரைவிட அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
அதற்கமைய, மீன்பிடி மற்றும் கடற்படையினர் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.




