
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடச் சென்று காணாமல் போன உதைபந்தாட்ட வீரரான இளைஞர் இன்று(30) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம்(28) பிற்பகலில் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.
கடலில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதனையடுத்து இரு தினங்களாக தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று(30) சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்னும் உதைபந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார்.
Follow Us



