இலங்கைஉலகம்குற்றவியல்தென் மாகணம்
Trending

அக்குரேகொட இரண்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது

பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக 20 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(14) இடம்பெற்ற குறித்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button