Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்
Trending

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்: பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சியின் பயனாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முன்னின்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு ஈரான் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இது ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டம் மற்றும் ஈரானின் 10 அம்சத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொண்டமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து பாகிஸ்தானில் போச்சுவார்த்தைக்கான் ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த போர்ச் சூழல் தற்காலிகமாக விலகியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button