
சிரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து டமாஸ்கஸ் – டெய்ர் எல்-சோர் நெடுஞ்சாலையில் நேற்று(25) இடம்பெற்றுள்ளது.
பயணிகள் பேருந்தொன்றும், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பாக சிரியப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளங் காணும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

Follow Us



