இலங்கை
Trending

எரிவாயுக் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகை!

மே மாதத்திற்கான சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், பிறிதொரு கப்பல் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதா லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இதனை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின்
மே மாதத்திற்கான 33 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button