
கொழும்பு – பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
மருதானை நோக்கி சென்ற ரயில் குறித்த நபரை மோதியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us



