விளையாட்டு
Trending

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன்படி, 50 ஓவர் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய இரு போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரித் அசலங்க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு நாள் போட்டியில் குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, . தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, தீக்ஷண, சச்சிந்து கொழும்புக்கே, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, அசித பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டி அணியில் குசல் மெண்டிஸ் , சரித் அசலங்க , கமிந்து மெண்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார ,லஹிரு உதார, ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, தீக்ஷண, தருந்து ரத்நாயக்க, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணி இங்கிலாந்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்காக இலங்கை அணி எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button