
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில், யாழ்.மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் சுரேந்தர் சபின், தமிழ் மொழிமூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், மாணவன் சுரேந்தர் சபின், 188 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழிமூலத்தில் குருநாகல் அஹட்டுவெவ ஆரம்ப பாடசாலை மாணவன் தனுஷ் தீக்ஷன வீரசேகர, 193 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

Follow Us



