
ஏழாவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெறள்ளது.
இந்த மகாநாடு வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா தலைமையில் நாளை (91) மற்றும் நாளை மறுதினம்(02) இடம்பெறள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 11 நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின் போது 60க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் அறிமுகம் செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளன.
திருக்குறள் மாநாட்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



