யாழ் ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள பழைய கடற் கோட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் இன்று(02) நேரில் சென்று பார்வையிட்டார்.
ஊர்காவற்றுறை கடற் கோட்டையை புனரமைத்து அதனூடாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

போர்த்துக்கேயரால் 1629 இல் கட்டப்பட்ட ஊர்காவற்றுறை கடற் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் புனரமைக்கப்பட்டது.
கிரனைட் கற்கள் மற்றும் கடற்ஏபாறைகளால் கட்டப்பட்ட இந்தக்கோட்டை இன்று சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கோட்டையை புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!