இலங்கை

களுத்துறையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button