
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை கொழும்பு உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, ஒரு மில்லியன் ரூபா மில்லியன் பெறுமதியான இரண்டு சரிரப் பிணையில் விடுவித்துள்ளார்.
தற்போதைய அமைச்சர் குமார ஜயகொடி, 2015 ஆம் ஆண்டில் உரக் கூட்டுத்தாபன பொறுப்பாளராக பணியாற்றினார்.
அதன்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு இலாபத்தையும் ஆதாயத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் ஊழல் செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

Follow Us



