Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்விளையாட்டு
Trending

தென்னாபிரிக்க - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

4 ஆவது போட்டியின்போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

ஐந்தாவது போட்டி, நியூசிலாந்தின் ஹக்லி ஓவல் மைதானத்தில் இன்று(25) இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தெடுப்பை தேர்வு செய்தது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அதற்கு அமைய துடுப்படுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக, Connor esterhuizen 33 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக Bevon jacobs19 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றார்.

அதற்கமைய தென்னாபிரிக்க அணி தொடரை தனதாக்கிக் கொண்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button