
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றப்பட்டுள்ளதோடு சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடி படையினர் நேற்றிரவு(24) குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கைதான சாரதியும் டிப்பரையும் மேலதிக நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர், பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்று ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில்,டிப்பர் வாகனத்தையும், சந்தேக நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Follow Us



