இலங்கைஉலகம்குற்றவியல்மங்கையர் அரங்கம்வடக்கு மாகாணம்
Trending

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது!

சிறுவர்கள் மீதான
துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில் யாழ் நாவற்குழிப் பகுதியிலும் அவ்வாறான தொரு சம்பவம் பதிவாகி இருக்கிறது.

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி விகாரைக்கு அருகில் வசித்த சிறுமி ஒருவர் விகாரை வளாகத்தில் காணப்படும் வடிகட்டிய நீரிணை பெறுவதற்காக கடந்த 29 ஆம் திகதி அங்கு சென்ற போது விகாரையிலிருந்த பிக்கு ஒருவரால் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை தாயாரிடம் தெரிவித்திருக்கின்றார்.

அதனையடுத்து, சிறுமியின் தாயார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிசாரால் குறித்த பிக்குவை கடந்த 29 ஆம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதன்போது சந்தேகநபரான பிக்குவை நேற்றைய 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

சிறுமி தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால், குறித்த பிக்குவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button