இலங்கைஉலகம்
Trending

பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது!

திருகோணமலை, கோமரங்கடவல -அடம்பன பகுதியில் 08 ஆம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சந்தேகநபர், சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த மாணவர்கள் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button