இலங்கை
Trending

பொற்பதி - மணற்காடு வீதியைப் புனரமைக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி – மணற்காடு இணைப்பு வீதியை புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணற்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையேயான சுமார் 500 மீற்றர் வீதி பல ஆண்டுகளாக புனராமைக்கப் படமையால் பொற்பதி மற்றும் மணற்காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொற்பதி மற்றும் மணற்காடு கிராம மக்கள் மீன்பிடி தொழிலை பிரதான ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர்.

வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் சுற்றி தொழிலுக்கு செல்லவேண்டியுள்ளது.

மேலும் பொற்பதி றோமன் காத்தோலிக்க பாடசாலையில் தரம் 9 வரையே வகுப்புக்கள் நடைபெறுகின்றன. மணல்காடு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் வரை வகுப்புக்கள் இடம் பெறுகின்றன.

பொற்பதி பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 10, 11, மற்றும் உயர் தரங்களில் கற்பதற்காக பருத்தித்துறைக்கு சுமார் 12 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக உரியவர்கள் கவனமெடுத்து வீதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button