போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி 5 வீட்டு திட்ட பகுதியில் நேற்று(17) இரவு இடம்பெற்றது.
நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இளைஞர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டுள்ளார். இதன்போது குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையில் குறித்த இளைஞர், போதைப்பொருள் தொடர்பாக வழக்கொன்றில் தண்டனை அனுபவித்து கடந்தவாரம் சிறையிலிருந்து வெளிவந்தமை தெரியவந்துள்ளது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!