
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
இந்த மரதன் ஓட்டப்போட்டி, நேற்று(10) பிற்பகலில் இடம்பெற்றது.
20 கிலோ மீற்றர்கள் தூரங்கொண்டதாக இந்த மரதன் ஓட்டம் இடம்பெற்றிருந்தது.
மணற்காட்டுச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய மரதன் ஓட்டம், நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய வளாக முன்றலில் நிறைவடைந்தது.

இந்த போட்டியில் மணற்காடு மற்றும் நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 ற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் பற்றியிருந்தனர்.
குறித்த போட்டியில் 20 கிலோ மீற்றர் தூரத்தை கேதீஸ்வரன் கவீந்திரன் 40 நிமிடங்களில் நிறைவு செய்து முதலிடம் பெற்றார்.
ஜெயரஞ்சன் லக்சன் 43 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தையும், பாஸ்கரன் ரிஷிகரன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, இந்தப் போட்டியில் பங்கேற்ற 13 வயதான சிவலக்ஸ்பன் அபர்ணா மற்றும் 16 வயதான சிவலக்ஸ்பன் லக்சிகா ஆகிய சிறுமிகள் போட்டித் தூரத்தை முழுவதுமாக ஓடி நிறைவு செய்திருந்தமை சிறப்பம்சமாகும்.



