
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு 14 நாட்கள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை அனுமதி
அளித்துள்ளது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் பெப்ரவரி 28 முதல் இரத்து செய்யப்பட்டிருந்தன.
இதனால் சில வெளிநாட்டுப் பயணிகள், திட்டமிட்டபடி நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டதாக முறையிட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பெப்ரவரி 28 முதல் இரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் விசாக்களை 14 நாட்களுக்கு இலவசமாக நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் இலங்கையில் சட்டப்பூர்வமாக தங்கியிருந்து மாற்று பயணத் திட்டங்களை ஏற்பாடு செய்ய போதுமான நேரத்தை அனுமதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



