Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்
Trending

ஈரானுடனான போர் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு: அதை ஈரான் மறுப்பு!

ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்குவரவுள்ளதாகவும்,அதன்பின் எரிபொருள் விலை குறையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மியாமியிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்

சந்திப்புன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இராணுவ இலக்கை நிறைவு செய்வதில் முக்கிய முன்னேற்றங்களை அடைந்து வருகிறோம் எனவும், ஈரானிலுள்ள ஒவ்வொரு இலக்கையும் முழுமையாக அழித்துவிட்டோம் எனவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கடற்படைச் சக்தி அழிக்கப்பட்டுள்ளது எனவும், 51கப்பல்கள்
அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிடம் தற்போது கடற்படை இல்லை, விமானப்படையும் இல்லை, விமான எதிர்ப்பு உபகரணங்கள் எதுவும் இல்லையெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் போரின் முடிவை அமெரிக்கா தீர்மானிக்க முடியாதெனவும், போரை எப்போது முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானிக்க முடியும் எனவும் ஈரானிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களுடைய ஆயுதக்கிடங்கு நிரம்பியே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CNN உலக செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video