Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்
Trending

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க ட்ரம்ப் உத்தரவு!

மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்புக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தனது ‘TruthSocial’ தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுடனான இந்த விரிவான மற்றும் ஆழமான பேச்சுக்கள் இந்த வாரம் முழுவதும் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் பகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வாக இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video