வீடுகளுக்கான சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!

டித்வா புயல் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை (08) முதல் ஆரம்பமாகும் என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்ட விசேட குழுவால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி மண்சரிவுகளால் 1,289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 44,574 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

Exit mobile version