இலங்கைவடக்கு மாகாணம்

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தமிழரசுக்கட்சி வசம் உள்ளது.

இந்தநிலையில்,2026 ஆம் ஆண்டிற்கான பதீடுக்காக சபை அமர்வு, தவிசாளர் பொன்னையா குகாதாசன் தலைமையில் நேற்று (18) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து தவிசாளர் பொன்னையா குகதாசன் பாதீட்டை சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போது காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

இறுதியாக 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

28 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில், தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 உறுப்பினர்களையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலா உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.

அவர்களில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கமைய நீக்கப்பட தற்போது சபை 26 உறுப்பினர்களை சபை கொண்டுள்ளது.

இந்த 26 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் நேற்று சபை அமர்வுக்கு வருகைதரவில்லை.

சபை அமர்வுக்கு வருகைதந்த 25 உறுப்பினர்களின் ஏகமதனான ஆதரவோடு பாதீடு நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button