
இத்தாலி மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (12)நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 17 ஆவது போட்டியில்10 விக்கெட் வித்தியாசங்களில் இத்தாலி அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற இத்தாலி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 19.3 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 12.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களை குவித்தது.
இதன் பிரகாரம்,இத்தாலி அணி இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

Follow Us



