
போருக்கான இழப்பீட்டை ஈரானிடம் இருந்து அமெரிக்கா கோரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரியிருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் தற்போது இழப்பீடு கோருகிறது. ஆனால் இதற்கு முந்தைய எந்தவொரு பேச்சுவார்த்தைளிலோ அல்லது கூட்டங்களிலோ ஈரான் இதனைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைத்து நபர்களுக்காகவும், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காகவும் ஈரானிடம் இருந்து தானும் இழப்பீடு கோருவதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us



