
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து
05 மனித என்புக்கூடுகள் நேற்று(12) அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 06 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் இடம்பெற்றன.
இதேவேளை, இதுவரை இடம்பெற்ற முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில்
544 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Follow Us



