இலங்கைவடக்கு மாகாணம்

சிறைக் கைதிகளுக்கு தின்பண்டங்கள் வழங்க இன்று அனுமதி!

சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை இன்று (25) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சிறை விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு கைதிக்கு போதுமான அளவு உணவு அல்லது இனிப்புகளை பார்வையாளர்கள் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த விசேட ஏற்படு நாடு முழுவதுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பார்வையாளரின் வருகைகளின் போது பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சிறை அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button