
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின்மீது
பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


சந்தேகத்திற்கிடமான டிப்பர் வாகனத்தை பொலிஸார் இடைமறித்தபோது நிறுத்தாமல் சென்றுள்ளது.
அதனையடுத்து டிப்பர் மீது ஐந்து தடவைகள் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.


இருந்தபோதிலும் டிப்பர் வீதியில் மணலை கொட்டியவாறு தப்பிச்சென்றுள்ளது.
தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Follow Us



