உலகம்
Trending

அமெரிக்க ஐனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பதவி விலக்க் கோரி போராட்டங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகவேண்டும் எனக்கோரி அமெரிக்காவில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்கள், “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகிறன.

ஈரான் மீதான போர், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ட்ரம்ப் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள்
நியூயோர்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இடம்பெற்றுவருகிறன.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் பிற அதிகாரிகளின் உருவப் பொம்மைகள் மற்றும் பதாகைகளை தாங்கியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர், இந்த போராட்டங்களை “ட்ரம்ப் மீதான வெறுப்பு சிகிச்சை” எனத் தெரிவித்து அதனை நிராகரித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button