Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்த
நெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெடுந்தாரகை படகு நெடுந்தீவின் மாவிலித் துறைமுகத்தில் இருந்து இன்று(15) பிற்பகல் 3.00 மணிக்கு தனது சேவையை முன்னெடுத்திருந்தது.

இன்றைய நாளின் இறுதிச் சேவையாக இந்தச் சேவை இருந்ததால் மக்கள் யாழ் நோக்கிச் செல்ல அதிகளவில் கூடி நின்றனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

புதுவருட தினத்தை முன்னெட்டு நெடுந்தீவு சென்றிருந்த மக்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் வந்தவர்கள் என 150 இற்கும் அதிகமானோர் சேவையை பெற காத்திருந்தனர்.

ஆனால் குறித்த நெடுந்தாரகை படகின் சேவையை முன்னெடுப்போர் சட்டத்தின் பிரகாரம் என கூறி 100 பயணிகளை ஏற்றிய நிலையில் மிகுதி 50 க்கு மேற்பட்ட பயணிகளை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் விட்டு சென்றுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது பயணத்தை தனியார் படகொன்றை 35 ஆயிரம் ரூபாவுகு வாடகைக்கு அமத்தி தமது பயணத்தை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button