
சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ, ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சீனாவின் பீஜிங் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் சீன வெளிவிவகார அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(12) காலையில் வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொன்க் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.
சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை – சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை இதன்போது வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மூத்த அரச தலைவர்கள், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர்
கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.



