இலங்கைஉலகம்மலையகம்
Trending

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நடைமுறைப்படுத்த
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று (30) கைசாத்து இடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளத்தின் தலைவர் ஒப்பந்தத்தில் கை சாத்திடப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கமைப்பு அமைச்சர் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் அதிகாரிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில் இந்த கைச்சாத்து இடம்பெற்றுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button